நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு ஜனவரி 1 முதல் தொடங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும்,முன்களப் பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் தெரிவித்தார். இந்நிலையில்,நாடு முழுவதும் 15 வயது முதல் 18 […]
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கோவாக்சின் தடுப்பூசி வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்ததை தற்காலிகமாக ரத்து செய்வதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு கடந்த பிப்ரவரி மாதம் பிரேசில் அரசு அனுமதி வழங்கியது.அதன்படி,பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து முதற்கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. மொத்தம் 2 கோடி அளவிற்கு தடுப்பூசிகளை வாங்கவும் பிரேசில் அரசு முடிவு செய்தது. ஆனால்,பிரேசிலில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 500,000 ஐ […]
டெல்லியில் கோவாக்சின் தடுப்பூசிக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே புதிதாக இனி யாருக்கும் கோவாக்சின் முதல் டோஸ் செலுத்தப்படமாட்டாது என கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியா முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விதமாக தடுப்பூசி போடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் பலரும் தற்போது தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது. […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமெடுத்து வருவதால் தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரமாக்கியுள்ளது. இந்தியர்களுக்கு இந்த வருடத்திலேயே தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில், பாரத் பையோடெக் நிறுவனம் ஒரு தொகுப்பு தடுப்பூசி தாயாரிக்க 4 மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. கொரோனா அலை வேகமெடுத்துள்ளதால் தடுப்பூசியை போடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பல மாநிலங்கள் தன்னிச்சையாக தடுப்பூசி நிறுவனங்களிடம் தடுப்பூசி இறக்குமதி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி […]
கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் அவசரகால பயன்பாட்டு பட்டியலுக்கு,பாரத் பயோடெக்கிலிருந்து ‘கூடுதல் தகவல்’ தேவை என்று WHO தெரிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு,அவசரகால பயன்பாட்டு பட்டியலை (EUL) பெறுவதற்கு ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி WHO வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் சமர்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (பிபிஐஎல்) நிறுவனம்,கோவாக்சின் தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு பட்டியலை (ஈயூஎல்) பெறுவதற்காக,ஏற்கனவே 90 சதவீத ஆவணங்களை உலக சுகாதார அமைப்புக்கு சமர்ப்பித்துள்ளதாகவும், […]
பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை தோல் வழியாக பரிசோதிக்க ஒப்புதல் பெற்றுள்ளது. பாரத் பயோடெக் அதன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தோல் வழியாக பரிசோதிக்க ஒப்புதல் பெற்றுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனத்திற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் நேற்று ஒப்புதல் அளிகப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையின்படி, தடுப்பூசி பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டால் இந்த செயல்முறை அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடவும் குறைந்த அளவு தடுப்பூசி தேவைப்படுவதால் கோவாக்சின் மலிவானதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாராகும் […]