நவம்பர் 8 முதல் கோவாக்சின் தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு அமெரிக்காவிற்குள் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய கொரோனா தடுப்பூ சியான கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் வருகிற நவம்பர் 8 ஆம் தேதி முதல் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்காததால் பல […]
இலங்கை அமைச்சரவை இந்த வாரம் உலக சுகாதார அமைப்பு தடுப்பூசி ஒப்பந்தத்தின் இரண்டாம் பாகத்தில் கையெழுத்திடும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், பல நாடுகளில் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இலங்கை அரசு covax தடுப்பூசி பெறுவதற்கான ஒப்பந்தத்தை பெற தயாராக உள்ளது. நோய் தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி அங்கீகாரம் இதற்கு அளித்துள்ளது. இந்த திட்டத்தின் […]
சீனா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவில் விநியோகத்திற்காக ‘COVAX’ கூட்டணியில் இணைந்துள்ளது. உலகளவில் கொரோனா தடுப்பூசிகளை சமமாக விநியோகிக்க சீனா, உலக சுகாதார அமைப்பின் “கோவக்ஸ்” என அழைக்கப்படும் கொரோனா தடுப்பூசி கூட்டணியில் சேருவதாக இன்று தெரிவித்துள்ளது. நேற்று, தடுப்பூசி கூட்டணியில் இணைவதற்கு சீனா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்நிலையில் தற்போது உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸில் இணைந்தது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மேலும், […]