மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி நீரானது ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.