சமூக வலைதளங்களை சிறுவர், சிறுமியர் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த, வயது வரம்பை நிர்ணயிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் சட்டப்படிப்பு பயிலும் சஸ்கந்த் பாஜ்பாய், அப்யுதயா மிஸ்ரா என்ற 2 மாணவர்கள் தாக்கல் செய்த பொது நல மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில் சமூக வலைதளங்களை, விளம்பரம் செய்யும் தளமாக பலரும் மாற்றி வருகின்றனர். ஆபாச படங்கள், வீடியோக்களை தொடர்ந்து […]