பீகாரில், கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு ஹோமியோபதி மருந்துகள் கொண்ட ரசாயனங்கள் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாடுகளுக்கு முன்னர் நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது பீகார் கள்ளச்சாராய சம்பவம் தான். பீகார் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து , இசுவாபூர் காவல் நிலைய அதிகாரி உட்பட 5 அரசு அதிகாரிகள் அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கை […]
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ள சாராயம் அருந்திய 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஒருவர் யாரென்று தெரியவில்லை எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் உபேந்திரநாத் வர்மா அவர்கள் இது இயற்கைக்கு மாறான ஒன்று எனவும், முதல் கட்ட விசாரணை […]
மயிலாடு துறையில் கள்ளச்சாராயம் குடித்து 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் மாவட்ட கண்காணிப்பாளர் பல்வேறு சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சேந்தன்குடியில் ஐந்து நபர்கள் ரகசியமாக கள்ளச்சாராயம் வாங்கி அருந்தி வந்தனர். அதில் இரண்டு பேர் கள்ளச்சாராயம் அருந்தியவுடன் […]
நெல்லையில் வீட்டில் வைத்து கள்ள சாராயம் காய்ச்சிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு தளர்வுகளற்ற ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஊரடங்கின் பொழுது அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் முதற்கொண்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மதுபான கடைகளும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கேட்டு பல […]
இன்று அங்கங்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் இருந்தாலும், பல இடங்களில் கள்ள சாராயம் மறைவான முறையில் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கள்ள சாராயத்தால், பல குடிமகன்கள் உயிரிழந்துள்ளனர். இதனை தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது வழங்கப்படும் என்றும், ஜன.26ஆம் தேதி குடியரசுத் தினத்தன்று விருதுடன் பரிசுத் தொகையாக ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் ரூ.40,000 […]