கிராமங்களை இணையத்துடன் இணைக்க பாரத்நெட் திட்டமும் ஒரு முக்கிய மாறும் அம்சமாக மாறியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நிதி ஆயோக்கின் 6வது நிர்வாக கவுன்சில் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மாநில முதல்வர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், கொள்கை கட்டமைப்பிற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது.கிராமங்களை இணையத்துடன் இணைக்க […]
கீழடியில் தென்னை மரங்களை வெட்டி கிராம சபை கூட்டத்தை நடத்திய தி.மு.க.வினர், ஸ்டாலினுக்கு சிவப்பு கம்பளம் விரித்து தங்கள் ஆடம்பரத்தை காட்டினர். இது எல்லாவற்றையும் விட திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. போஸ் என்பதற்கு பதில் சாமி என ஸ்டாலின் உளறிக் கொட்டியதை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். சிவகங்கை மாவட்டம் கீழடியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டது. விதிகளை மீறி கூட்டம் சேர்ப்பதற்காக அருகில் உள்ள பள்ளியில் இருந்து மாணவ, மாணவிகளும் அழைத்து வரப்பட்டனர். […]