தவெகவில் விஜய்க்கே முழு அதிகாரம்., மும்மொழி கொள்கை, வக்பு சட்டத்திருத்தம்.., 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன் என பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைமை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். அங்கு கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே அதிலும் பாஸ் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. […]