Tag: Corporation

1933 காலிப்பணியிடங்கள்…மாநகராட்சி, நகராட்சிகளில் வேலை வாய்ப்பு.! தமிழக அரசு அறிவிப்பு.!

தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 காலிப்பணியிடங்களுக்கு பிப்.9 முதல் மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாக உள்ள 1933 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு, விண்ணப்பதாரர்கள் வரும் பிப்.9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் […]

Corporation 3 Min Read
Tngovt-1

#BREAKING: பெருநகர வளர்ச்சி குழுமம்; பணியிடங்களை உருவாக்கி அரசு உத்தரவு!

கோவை, திருப்பூர், மதுரை, ஓசூர் உள்ளிட்ட நகரங்களில் பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க சிறப்பு அதிகார பணியிடங்களை உருவாக்கப்பட்டுள்ளது. அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த, கட்டுமான திட்ட அனுமதியை விரைவுபடுத்த பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க ஐஏஎஸ் நிலையில் சிறப்பு அதிகார பணியிடங்களை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

#TNGovt 2 Min Read
Default Image

அவசர சட்டம் பிறப்பிப்பு : தமிழகத்தின் 20 -வது மாநகராட்சி தாம்பரம் ….!

தமிழகத்தின் 20  மாநகராட்சியாக தாம்பரத்தை அறிவித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்துள்ள தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் என அனைத்தையும் இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த அவசர சட்டம் மூலமாக தாம்பரம் தமிழகத்தின் 20 ஆவது மாநகராட்சியாக உருவாகியுள்ளது.

Corporation 2 Min Read
Default Image

#Breaking:தாம்பரம் மாநகராட்சியாக அறிவிப்பு – தமிழகஅரசு..!

தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தை மாநகராட்சியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தாம்பரம்,பல்லாவரம்,செம்பாக்கம்,பம்மல்,அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் 16 வது மாநகராட்சியாக உருவாகிறது தாம்பரம் மாநகராட்சி. அதேபோல, காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.    

Corporation 2 Min Read
Default Image

பழக்கடைகளை பந்தாடிய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் காத்திருப்பு பட்டியலுக்கு அதிரடி மாற்றம்…..

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமுக இடைவெளியை கடைபிடிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை சமூக இடைவெளி இன்றி பழங்களை விற்பனை செய்த மூன்று கடைகளில் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் திரு. சிசில் தாமஸ் அவர்கள் பழங்களை கீழே தள்ளி கடைகளை காலிசெய்தார்.  இது தொடர்பான  வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த வாணியம்பாடி நகராட்சி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் […]

Corporation 4 Min Read
Default Image

தமிழகத்தின் 15வது மாநகராட்சியானது ஆவடி!தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் மொத்தம் 14 மாநகராட்சிகள் உள்ளது.அதில், தமிழகத்தில் சென்னை,கோவை,திருச்சி, மதுரை,சேலம், திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், ஒசூர்,தூத்துக்குடி ஆகியவை ஆகும். இந்நிலையில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது .அதில் ,தமிழகத்தில் 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்துள்ளது. நகராட்சியாக இருந்த ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்பட நகராட்சிகள் இணைக்கப்பட்டு ஆவடி மாநகராட்சியாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

#Chennai 2 Min Read
Default Image

பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தை அணுகவும்: மாநகராட்சி ஆணையர்…!!

சேலத்தில், பெரிய நிறுவனங்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார். ஜனவரி 1-ம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில், சேலத்தில், பிளாஸ்டிக் இல்லாத புத்தாண்டு என்ற பெயரில், மாநகராட்சி நிர்வாகம், பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் இயக்கத்தை தொடங்கியுள்ளது. இதில், மாநகராட்சி ஆணையர் சதீஷ் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த […]

Commissioner 2 Min Read
Default Image