நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி தொடங்கி வரும் 17-ம் தேதி வரை 3 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் மே 17-ம் தேதிக்கு பின் 4-ம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும் என்று பாரத பிரதமர் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் மற்றும் வேலைகளுக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கு சிக்கி தவித்து வருகின்றனர். […]
ஐரோப்ப நாடன பிரிட்டனில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் இதன் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் சுகாதார சேவை செய்ய மருத்துவர்கள், செவிலியர்கள் , துப்பரவு பணியாளர்கள், காவலர்கள் என அனைவரும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு கடும் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பணிச்சுமைக்கு மத்தியிலும் தேசிய சுகாதார சேவையின் செவிலியர்களான ரெபேக்கா சின்னாரா (வயது 22) மற்றும் சோலி வெப் (வயது 24) ஆகிய செவிலியர்கள், தங்கள் மிஸ் இங்கிலாந்து […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அறிவிக்கப்பட்ட பொது ஊரடங்கின் காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீட்க சிறப்பு இரயில்கள் மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வரை 642 சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கியுள்ளது. இந்த 642 ரயில்களும், ஆந்திரப்பிரதேசம் (3 ரயில்கள்) பீகார் (169 ரயில்கள்), சட்டீஸ்கர் (6 ரயில்கள்), இமாச்சல் பிரதேசம் (1 ரயில்) ஜம்மு காஷ்மீர் (3 ரயில்கள்), ஜார்கண்ட் […]
உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 113 வயது மூதாட்டி கொரோனாவின் பிடியில் இருந்து முற்றிலும் குணமடைந்து அசத்தியுள்ளார். ஸ்பெயின் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஓர்லாண்டோவில் உள்ள முதியோர் காப்பகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ரியா பிரன்யாஸ் (113) என்ற மூதாட்டி தங்கியுள்ளார். இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தனி அறையில் பல வார காலமாக தனிமைப்படுத்தப்பட்டார். இவர் […]
நமது பாரத பிரதமரால் அறிவிக்கப்பட்ட செயலியான ஆரோக்கிய சேதுவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியாக தற்போது உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொற்று உள்ளவர்கள் வசிக்கும் பகுதியை கண்டறிய உதவும் வகையில் ஆரோக்கிய சேது செயலியை கடந்த மாதம் மத்திய அரசின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பதிவிறக்க மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து இந்த செயலி அறிமுகம் ஆன 13 நாட்களில் இந்த செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை […]
மகாராஷ்ராவில் கடந்த மார்ச் 25 முதல் காவல்துறையினர் அயராது பொது ஊரடங்கை நிலைநாட்ட அதிக வேலை செய்து வரும் நிலையில் அவர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டியுள்ளதால் மத்திய ஆயுதப்படை காவலர்களை அனுப்பி வைக்கமாறு மத்திய அரசிடம் மகாராஷ்டிரா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கொடிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது மஹாராஷ்டிரா. இங்கு 24ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் அம்மாநில […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவும் வகையில் ரூ.20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொருளாதார வளர்ச்சி குறித்த சிறப்பு திட்டங்களை நிதி அமைச்சர் அறிவிப்பார் என பாரத பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளிக்கப்படும் என அமைச்சர் கூறியிருந்தார். இந்த […]
உலகின் முக்கிய கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவருமான பில்கேட்ஸ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே உலக மக்களை எச்சரித்திருந்தார். அதில், அடுத்த பத்து ஆண்டுகளில் உலகளாவிய பேரழிவு போரினால் இருக்காது என்றும், பல கோடி மக்களை நுண்ணுயிரி கொன்று குவிக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு தயாராக தவறினால், எபோலாவைவிட அழிவு மிகவும் அதிகமாக இருக்கும் என்று கூறியிருந்தார். அப்போது பில்கேட்ஸ் கணித்தது தற்போது உண்மையாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை […]
உலக அளவில் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பில் முதலிடத்தில் ஐக்கிய அமெரிக்காவும், 2-ம் இடத்தில் ஸ்பெயினும் உள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இருந்தன. இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 5-வது இடம் வகித்து வந்த ரஷியா, நேற்று இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த சில நாட்களாக, ரஷியாவில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் […]
சீனாவின் வூகாண் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலக அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்புகளை அதிகம் சந்தித்த நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடம் வகிக்கிறது. அந்நாட்டில் மட்டும் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றின் கரணமாக பலியாகி உள்ளனர். மேலும், 13.7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தவைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட்டு திரும்பி சென்றுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து […]
வெளிமாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பும் புதுச்சேரி வாசிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 3 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை புதுச்சேரியில் 4364 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு 4273 பேருக்கு கொரொனா தொற்று இல்லை என வந்துள்ளதாகவும் , மேஉம், 74 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவுள்ளதாகவும் தெரிவித்தார். நாளை முதல் […]
நம் நாட்டில் வேகமாக பரவிவந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு முழு ஊரடங்கை அறிவித்தது. என்வே பல்வேறு மாநிலங்களுக்கு வேலை தேடி சென்ற மற்றும் பார்த்துவரும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல மிகவும் சிரமப்பட்ட நிலையில் இதற்கு மத்திய அரசு தீர்வு காண சிறப்பு இரயிலை இயக்க முடிவு செய்தது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் அவர்கள் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடியின் அறிவுறுத்தல்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக குறைந்த காலத்தில் 364 […]
சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதும் பரவிய பெருந்தொற்றாக மறியது. இந்த தொற்று இந்தியாவையும் விட்டுவைக்க வில்லை. எனவே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இருக்கும் சூழலில், பல்வேறு மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகள் இயக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அவர்கள் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தனியார் கிளினிக்குகள், நர்சிங் ஹோம் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆய்வகங்கள் […]
சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று எளிதில் உலக நாடுகளுக்கு பரவியது. இந்த பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லம்போக் என்ற இடத்தில் உள்ள மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர். அந்த தண்டனை கைதிகளில் சுமார் 70 சதவீத கைதிகளுக்கு, அதாவது 792 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அந்த சிறை ஊழியர்கள் 11 பேருக்கும் கொரோனா வைரஸ் […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது இந்த முழு ஊரடங்கை சில விஷமிகள் மதிக்காமல் வெளியே சுற்றி திரிந்தனர். அவர்கள் மீது ஊரடங்கை மீறியதாக கைது செய்தனர். அந்த வகையில், தற்போது வரை 4,54,016 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சீர்மிகு தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,434 பேர் ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை […]
கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக இந்திய அரசு சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி ஆரோக்கிய சேது என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை அரசு, தனியார் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் ஓர் உத்தரவும் பிறப்பித்தது. இதுவரை இந்த செயலியை சுமார் 9.6 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியானது, கொரோனா வைரஸ் பாதிப்புள்ள பகுதிகள், வைரஸ் […]
உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று பாரவி அனைத்து துறைகளையும் ஆட்டம் காணசெய்துவிட்டது. இந்த கொடிய பெருந்தொற்றிலிருந்து தப்ப அனைத்து நாடுகளும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர். இந்நிலையில் தற்போது படிபடியாக அனைத்து நாடுகளிலுன் தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது சிங்கப்பூரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு புதிய சலுகைகள் அந்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் படி நாளை முதல் சலூன் கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரதுறை அமைச்சகம் சார்பில் நேற்று வெளியிட்ட […]
தமிழகத்தில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றினை எதிர்த்து போராடும் உன்னத பணியினை செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மருத்துவர். திருவாசகமணி தற்போது திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டீன் திருவாசகமணியை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நேற்று இரவு அதிரடியாக மாற்றி தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இவருக்கு பதில் தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையின் டீனாக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி டீன் ரேவதி நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா […]
தமிழகம் முழுவதும் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் குறைந்த பாடில்லை. இந்த கொரோனா வைரஸ் தொற்று பெரியவர், சிறியவர்,கர்ப்பிணி என எந்த பாகுபாடிறி அனைவரையும் தாக்கும் பெருந்தொற்றாக அறிவித்து அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது தான் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயமுத்தூரில், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்ணுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. கோயமுத்தூர், கரும்புக்கடை பகுதியை சேர்ந்த, […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது ரஷ்யாவில் தொடர்ந்து 7 நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்ப்ட்டோர் கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. ரஷ்யாவில் கொரோனா வைரசை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் புதின் எடுத்து வருகிறார். இந்நிலையில், தற்போது கொரோனா வரவலை கட்டுப்படுத்த ரஸ்யாவில் ஊரடங்கு ஐந்தாவது வாரத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் ரஷ்யா கடும் […]