மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 14,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கொரோனோவோல் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,66,129 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10,69,155 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 2,60,363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி, மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மட்டும் 430 பேர் உயிரிழந்துள்ள […]
இங்கிலாந்தில் கொரோனா பெருந்தொற்றை தடுக்க போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர், இங்கிலாந்து ராணி எலிசபெத் பிறந்த நாள் விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர். ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், இரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆண்டு தோறும், நாட்டில் சிறப்பாக பணியாற்றுவோரை கவுரவப்படுத்துவது வழக்கம். இதன்படி இந்தாண்டு ராணி எலிசபெத்தின், 94வது பிறந்தநாளையொட்டி, சமீபத்தில் கவுரவத்திற்குரியோர் பட்டியல், வழக்கமான முறையில் வெளியிடப்பட்டது.கொரோனா பரவல் காரணமாக, அந்த பட்டியல் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை மீட்க, போராடி […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் பழங்குடி மாணவர்களுக்கு கல்வி பயில ஆசிரியர் எடுத்த புதுமையான முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் உயர்நிலை பள்ளி ஆசிரியராக இருப்பவர் சபன் பத்ரலெக். இவர் மாணவர்களுக்கு கல்வி பயில, புதுமையான யோசனையை செயல்படுத்தியுள்ளார். அந்த கிராமத்தில் உள்ளவர்களின் ஆதரவுடன், வீட்டு திண்ணையின் களிமண் சுவரை கரும்பலகையாக மாற்றியுள்ளார். இதன் மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக வகுப்புகளை நடத்தி வருகிறார். […]
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பிறந்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டம் கவுரி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது பெண். இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த செவ்வாயன்று கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி., மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. மருத்துவர்கள் மற்றும் துணை […]
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அ.தி.மு.க.வை சேர்ந்த ரெட்டியார்பட்டி நாராயணன். இவர் சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்றார். பின்னர் கடந்த 17-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் நெல்லை திரும்பினார். அதன் பிறகு அவர் தினமும் தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மக்கள் பணி ஆற்றி வந்தார். பல்வேறு திட்ட பணிகள் தொடக்க விழாவிலும் கலந்து கொண்டார். மேலும் கொரோனா தொற்றால் பொதுமக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், நாங்குநேரி தொகுதியில் அனைத்து […]
உலகையே அச்சுறுத்தி வந்த, சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வூகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய நோய்தொற்று தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி உலக மக்களை பெரும் துயரத்திற்க்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்வேறு விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். இந்த முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் உலக மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் இந்த வைரஸ் […]
இயக்குனர் ராஜமௌலி சிகிச்சை முடித்து முழுமையாயக குணமடைந்து இருப்பதாக கூறி இருக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான ராஜமௌலிக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கொரோனா உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் இயக்குனர் ராஜமௌலி அதில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இயக்குனர் ராஜமௌலி சிகிச்சை முடித்து முழுமையாயக குணமடைந்து இருப்பதாக கூறி இருக்கிறார். மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மற்றவர்களை காப்பாற்ற பிளாஸ்மா தானம் செய்ய […]
நோவக் ஜோகோவிச்விற்கு இரண்டாவது கொரோனா பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது. உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் இவர் செய்த சாதனைகளை பற்றி நாம் சொல்லியே தெரியவேண்டாம், மேலும் இவருடைய மனைவி ஜெலினா இவர்கள் சொந்த நாட்டில் நலநிதி கண்காட்சி டென்னிஸ் போட்டிகளை நடத்தி வந்தனர் . இந்நிலையில் போட்டி நடக்கும் பொழுது அதில் உரிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாததால் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, கடந்த […]
சென்னையில் மாவட்டத்தில் போலீசில் கொரோனா பாதிப்பு 786 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது , நேற்றும் ஒரு நாள் மட்டும் சென்னையில் 1375 பேருக்கு கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டனர், இந்த நிலையில் சென்னையில் போலீசாருக்கு கொரனோ எண்ணிக் கை அதிகமாகதான் உள்ளது, சென்னை முன்னதாகவே 758 போலீசார் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை புதியதாக மேலும் 28 பேருக்கு கொரனோ […]
தருமபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சசிகிச்சை பெற்ற 5 பேரும் குணமடைந்ததால் அந்த மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றினால் இந்தியா முழுவதும் 106,475 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,302 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 6,147 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 146 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது 60,864 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் ஆதிக்கம் படிப்படியாக குறைந்து வரும் மாவட்டங்களை பச்சை […]
சொந்த ஊர் செல்ல அனுமதிகேட்டு ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி விரட்டினர். ஈரோடு மாநகர பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் சாய, சலவை, தோல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக வேலை இழந்து தவித்து வருகின்றனர். எனவே, இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உதவ மாவட்ட ஆட்சியர் திரு. […]
ஆந்திராவில் வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகளுடன், சேர்த்து 4வது முறையாக தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, வரும் மே 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆந்திராவில் மட்டும் […]
ஹிந்தி திரை உலகின் முன்னணி தயாரிப்பாளரான போனி கபூரின் வீட்டு பணியளருக்கு கொரோனா தொற்று. ஹிந்தி திரை உலகின் பிரபல தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் வீட்டில் வேலை செய்யும் பணியாரன 23 வயதான சரன் சாஹூ என்பவருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொற்று போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் உள்ளிட்ட அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து போனி கபூர் கூறியதாவது, […]
சென்னையில் 144 தடை உத்தரவு மே.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆணை. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கம் அடுத்தடுத்து தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு, 4-ஆம் கட்டமாக மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், சென்னையில் 144 தடை உத்தரவு மே.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என காவல் ஆணையர் […]
தலைநகர் சென்னையின் திரு.வி.க. நகர் மண்டலத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கம் அடுத்தடுத்து தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு, 4-ஆம் கட்டமாக மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கொரோனா தொற்றின் வீரியம் குறைந்த பாடில்லை. தற்போது தலைநகர் சென்னையின் […]
தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இன்று மட்டும் தலைநகர் டெல்லியில் புதிதாக 299 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாதால் இந்தியாவில் 10 ஆயிரத்தை தாண்டிய 4-வது மாநிலமாக தலைநகர் டெல்லி மாறியுள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி சொல்லனாத்துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. தற்போதுவரை 47 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில், இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3 லட்சத்து 12ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ரஷ்யாவில் மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அங்கு கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக வேலைவாய்ப்புகளை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வாகன வசதிகள் இல்லாத காரணத்தால் நடந்தே செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹரியானாவிலிருந்து சில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியபிரதேசத்தை நோக்கி நடந்து செல்லும்போது, அவர்களை டெல்லியின் சுக்தேவ் விஹார் மேம்பாலம் பகுதி அருகே காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களை சந்தித்துள்ளார். அந்த பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த மக்களிடம் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றியவாறு அவர்களுடன் அமர்ந்து […]
உலகம் முழுவதும் பரவிய கொடிய கொரோனா பெருந்தொற்றின் காரணாமக பலர் உயிரிழந்திருப்பினும் இதுவரை 18 லட்சம் பேர் இந்த கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை தற்போது 47 லட்சத்தை கடந்துள்ளது. இந்த தொற்று நோய் பாதிப்பால் 3 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில், குறிப்பாக அமெரிக்காவில் ஒரே நாளில் 23 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால்அங்கு மொத்த பாதிப்பு 15 […]
டெல்லியில் இருந்து புறப்பட்டு நேற்று கேரளா பயணம் செய்த 7 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா சிறப்பு ரயில் தலைநகர் டெல்லியில் இருந்து புறப்பட்டு நேற்று கேரளா வந்தது. இதில் பயணம் செய்த 7 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முழு ஊரடங்கின் காரணமாக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவிப்பவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல டெல்லியில் இருந்து 15 முக்கிய […]