உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 18 லட்சத்திற்கும் பொதுமக்களை கொரோனா பாதித்துள்ளது. இதனால், உலகில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க கொரோனாவால் 18,64,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,15,099 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. கொரோனாவில் இருந்து 4,33,823 பேர் மீண்டுள்ளனர். உலக வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அங்கு இதுவரை 5,60,433 […]