இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 17,336 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் 15,940 ஆக சற்று குறைந்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,33,78,234 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 88,284 லிருந்து 91,779 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 20 பேர் இறந்துள்ளனர், இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,24,974 […]
இந்தியாவில் ஒரே நாளில் 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கையும் முன்பைவிட அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஒரே நாளில் 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 17,636,307ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 15,659 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 15,659 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை ஆக 10,81,988 அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,206 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இன்று மேலும் 82 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழப்பு […]
உணவுக்காக தவிக்கும் மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை 21 நாட்களுக்குத்தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.இதனால் வேலை செல்ல முடியாமல் பல்வேறு மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு […]
இந்தியாவில் 21 வயது முதல் 40 வயது இடைப்பட்டவர்களே 42 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த வயது விவரக்குறிப்பு பகுப்பாய்வை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவல்: கொரோனாவால் 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என 42 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். நடுத்தர வயதுடையவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறிப்பிட்ட அவர் 9% சதவீத பாதிப்புகள் […]
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் கோவிட்-19 என்று பெயரிடப்பட்ட இவ்வைரஸின் பிறப்பிடமாக கூறப்படும் சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மின்னல் வேகத்தில் பரவியது.மேலும் தனது தொற்றால் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.இந்நிலையில் இந்த வைரஸ்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க வில்லை என்பது மற்றுமொரு வருத்தமான தகவல்.இதனால் வைரஸ் மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எல்லாம் ஒவ்வொரு நாடும் அதிதீவிர கவனம் செலுத்தி வருகின்றன. மேலும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தும், […]
உலகளவில் கொரோனா உயிரிழப்பு 59 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 59,140 ஆகமாக அதிகரித்து உள்ளது. உலகளவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,97,810 காக அதிகரித்துள்ளது. மேலும் உலகளவில் 2.28 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர் எனவும், பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 2,28,405 ஆக அதிகரித்துள்ளது உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பேரணி, பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இந்தியாவில் கொரோனாவால் 140-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது . இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஒரு மாதத்திற்கு பாஜகவினர் பேரணி, பொதுக்கூட்டம் அல்லது போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று அக்கட்சியின் […]