இங்கிலாந்தில் கொரோனாவால் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 45,000 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில் பின்பற்றிவரும் நடைமுறைகளை ஒருபோதும் கைவிடக்கூடாது. தற்செயலாக கூட கொரோனா பரவ நாம் அனுமதிக்கக்கூடாது. விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். ஐரோப்பாவின் பிற பகுதிகளில் இரண்டாவது அலை உருவாகலாம் என்பதால் நாமும் கவனமாக இருப்பது அவசியம் என்றார். […]
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான காலத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. கொரோனாவை தடுக்க பல நாடுகள் தற்போது ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல தங்கள் நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல நாடுகள் தங்கள் நாட்டு மக்களை மீட்க விமானங்களும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள வெளிநாட்டவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப காலத்தை நீட்டிப்பதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. […]
பொது மருத்துவமனையில் கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் செவிலியர்களாக பணியாற்றிவந்த இரட்டை சகோதரிகளான கேட்டி டேவிஸ், எம்மா டேவிஸ் இருவரும் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் உலக நாடுகள் பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. உலக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 1,48,377 இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகர பொது மருத்துவமனையில் இரட்டை சகோதரிகளான கேட்டி டேவிஸ், எம்மா […]
இங்கிலாந்தில் இதுவரை முதியோர் இல்லங்களில் இருந்த 1,400 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று அந்நாட்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. உலக முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி இருக்கு கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் உயிரிழப்பும் உயர்ந்துக்கொண்டே இருக்கிறது. இந்த வரிசையில் இங்கிலாந்தும் தற்போது சேர்ந்துள்ளது. இந்நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி அதிக உயிர்களை கொன்று வருகிறது. இதில், முதியோர் இல்லங்களில் இறந்தவர் சதவீதத்திலும் இந்த நான்கு நாடுகளுக்கு இடையே ஏறக்குறைய […]
இங்கிலாந்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 917 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவில் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 200 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 17 லட்சத்து 78 ஆயிரத்து 383 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் […]