திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகேயுள்ள ஊட்டத்தூர் என்ற கிராமத்தில் 23 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அந்த பகுதி நோய் தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், இம்மாத இறுதிவரையுள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது. […]
தமிழகத்தில் நேற்று மேலும் 38 பேருக்கு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 37 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக விஜயபாஸ்கர் கூறினார்.இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்தது. இந்நிலையில் திருச்சியில் 43 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இதுவரை கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பமால் இருந்த நிலையில் இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 32 […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 12 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதையெடுத்து அனைவரும் தங்களின் வீடுகளில் முடங்கி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் 834 பேர் பாதிக்கப்பட்டதாக நேற்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.இந்நிலையில் திருச்சியில் நேற்று வரை 36 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி […]