கொரோனா வைரஸின் தாக்கம் சில இடங்களில் அதிகரித்து வந்தாலும், பல மாநிலங்களில் அரசின் விறுவிறுப்பான நடவடிக்கையால் மக்கள் குணமாகி, சமூக பரவலிலிருந்து தப்பித்து வீடு செல்கின்றனர். அது போல தேனியில் தற்போது 18 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் இரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு வீடு கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்த படுகின்றனர்.