கொரோனா வைரஸால் ஒரத்தநாடு அருகே வடசேரியை சேர்ந்த 84 வயதான முதியவர் உயிரிழந்ததால், அம்மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 85 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே வடசேரியை சேர்ந்த 84 வயதான முதியவர் ஒருவர் கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று […]