உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இதன் தீவிரம் அதிகரித்து தான் உள்ளது. இதுவரை தமிழகத்தில் இந்த கொரோனா வைரஸால், 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து, […]
அத்தியாவசிய கடைகளின் நேரத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதனால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி […]
தமிழகத்தில் இருந்து முதல் சிறப்பு ரயில் மூலம் 1140 பேர் புறப்பட்டு ஜார்கண்ட் வரை செல்கின்றனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கு வருகின்ற மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதைத்தொடர்ந்து தங்கள் மாநிலங்களை விட்டு வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்கள், தொழிலார்கள் என அணிவரையும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல […]
நாளை தமிழகத்தில் மது கடைகள் திறக்கயுள்ள நிலையில், தமிழக அரசு மதுபானங்களின் விலையை ரூ.20 வரை உயர்த்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் குறையாததால் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதில், பல கட்டுப்பாடுகளையும் விதித்து மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வு கொடுத்தது. அதன்படி மதுக்கடைகள் திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இந்நிலையில், பல மாநிலங்களில் நேற்று முன்தினம் மது […]
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுபானம் வாங்க வரும் பொதுமக்கள் கட்டாயம் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அன்று முதல் மதுக்கடைகளும் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து ,கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட மதுக்கடையை திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இதனால், டெல்லி, கர்நாடக, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவு […]
குடை கொண்டு வந்தால் மட்டுமே மது வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், மதுபானக் கடைகள் மூடப்பட்டது. இதையடுத்து மது கிடைக்காத விரக்தியில் மது பிரியர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட மதுக்கடை நேற்று முன்தினம் டெல்லி, கர்நாடக, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டது. […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு 2 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,058 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பாக சென்னையில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. இன்று மட்டுமே அங்கு 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று கடலூரில் 68 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சியில் […]
சென்னையில், இன்று மட்டுமே 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,058 ஆக உள்ளது. மேலும் இன்று கொரோனாவால் இருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 33 ஆகவும், 1485 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பாக சென்னையில் அதிகமாக கொரோனா பரவி […]
தமிழகத்தில் ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடையே உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் 4 முறை ஆலோசனை நடத்தி இருக்கிறோம் […]
தமிழகத்தில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு செல்ல 1 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். தமிழகத்தில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு செல்ல 1 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அரசின் இணையதளம் பக்கத்தில் விண்ணப்பித்துள்ளார்கள். இதுவரை தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. வெளிமாநில தொழிலாளர்களை ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்ப ரயில்வே துறையுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர் […]