இன்று முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.இதில் இன்று […]
விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 22-ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதனிடையே விஜயகாந்த் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கு நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மியாட் மருத்துவமனை சார்பில் அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் , தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு செப்டம்பர் 28-ஆம் தேதி கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு ,நோய்த்தொற்று உறுதியாகி […]
தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 2,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், […]
வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவுள்ளது – முதல்வர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். நாளை மறுநாள் 4-வது பொதுமுடக்கம் முடியும் நிலையில், 5-வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது பற்றி முதல்வர் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 25-ல் மருத்துவ நிபுணர்களிடம் முதல்வர் ஆலோசித்த நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய முதலவர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா […]