புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 642 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 4 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,648 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,516 பேருக்கு சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 642 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் 496, காரைக்காலில் 110, ஏனாம் பகுதியில் 22, மாகியில் 14 என மொத்தம் 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் […]
கொரோனாப்பரவலின் இரண்டாவது அலை புதுச்சேரியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் இந்த உருமாறிய கொரோனாவை எண்ணி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 1,759 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. மேலும், 29 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 1,555 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 9,007 பேருக்கு கொரோனா பரிசோதனை இன்று புதிதாக மேற்கொண்டுள்ளனர். புதுச்சேரியில் மட்டும் 1,365 பேருக்கும், காரைக்காலில் 218 பேருக்கும், யாணம் பகுதியில் 120 பேருக்கும், […]
புதுச்சேரியில் ஊரடங்கு நீடிப்பது குறித்து நாளை நடைபெறவுள்ள அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு, நாளை முதல் முடிவடைகிறது. இதன்காரணமாக, அம்மாநிலத்தில் ஊரடங்கை நீடிப்பது குறித்து நாளை அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லையென அதிகாரிகள் தெரிவித்தனர். புதுச்சேரியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மாநில ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்காரணமாக ஆளுநர் அலுவலகம், நேற்று முதல் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை […]
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஆளுநர் மாளிகை 2 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், கடந்த 24 மணிநேரத்தில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,151 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மாநில ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. […]
புதுச்சேரியில் கொரோனவால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்த நிலையில், ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாறியது. புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. அதில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அம்மாநிலத்தில் 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அம்மாநிலத்தில் 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், ஆரஞ்சு மண்டலத்தில் இருந்த அம்மாநிலம், தற்பொழுது […]
புதுச்சேரி மாநிலத்தை சார்ந்தவர்கள் வெளிமாநிலத்திற்கு அனுமதியுடன் சென்று வந்தாலும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 4 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய அம்மாநில முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தை சார்ந்தவர்கள் வெளிமாநிலத்திற்கு அனுமதியுடன் சென்று வந்தாலும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் , குடியரசு துணைத் தலைவர் […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பொதுமக்களும் தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். தென்னிந்தியாவில் புதுச்சேரியில் மட்டும் தான் கொரோனாவால் பாதிப்பு குறைவாக உள்ளது. இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்று புதுச்சேரி திரும்பிய மேலும் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5லிருந்து 7ஆக உயர்ந்துள்ளது.இவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4067 லிருந்து 4281 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 109 லிருந்து 111 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 319 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் 05 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 01 கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதையெடுத்து புதுச்சேரியில் நாளை முதல் காலை 6 மணி […]
புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நபர் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற திருவண்டார்கோயில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய நிதி கொடுக்கலாம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். இதைத்தொடர்ந்து பலர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு தங்களால் இயன்ற நிதியை கொடுத்து வருகிறார்கள்.இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் 4 ஆண்டுகளாக சேமித்து வைத்த கல்வி உதவித்தொகையை தடுப்பு நடவடிக்கைக்கு கொடுத்துள்ளார். புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-வகுப்பு பயின்று […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது , பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தொடர்ந்து வெளியே வருவது வருத்ததை தருகிறது. புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் கடை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி திறந்திருக்கும். அதற்கு மேல் பொதுமக்கள் வெளியே சுற்றினால் கடுமையான […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய , மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் இந்தியாவில் 1071 பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி மக்களிடம் காணொளி மூலம் உரையேற்றும்போது 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டும் என கூறினார். இதையெடுத்து தற்போது நாடு […]
இந்தியாவில் கொரோனாவைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த 4 மாதத்திற்கான செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்காக புதுச்சேரி சட்டப்பேரவை கூடியுள்ளது. எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் முக கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர்.மேலும் கிருமிநாசினியும் வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்காததால் புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க செல்லும்போது அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மக்களின் அத்தியாவசியத்திற்காக மளிகைக் கடைகள், மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.ஆனால் புதுச்சேரியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்காததால் தற்காலிகமாக மூட புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் கூறுகையில், மக்கள் தங்கள் உயிரைப்பற்றி கவலைப்படவில்லை. […]
பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்களின் கடையின் உரிமம் ரத்து என்று புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும், மால்கள், திரையரங்குகள் மட்டுமின்றி நாட்டின் எல்லைகளும், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன.வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது இதனால், பெரிய நகரங்களில் […]
புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக உத்தர பிரதேசத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது என்று அம்மாநில அரசு அறிவித்தது. மேலும் அனைத்து அரசு மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டது. பின் குஜராத்தில் 10 மற்றும் […]
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், புதுவையில் நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார். மேலும் அவர், இந்த தொகை, இரண்டு நாட்களுக்குள் அவரவர்களின் வங்கிக்கணக்கிற்கு செலுத்தப்படும் எனவும் கூறினார்.
புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டேவருவதால், புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று […]