மக்களைக் காப்பது அரசின் பொறுப்பு என நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல என கமல்ஹாசன் ட்வீட். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். அதில், அலட்சியக் கிருமித் தாக்குதலாலும் இந்தியா அல்லாடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிலைப்பாட்டால், தடுப்பூசிகளின் விலை திடுமென உயர்ந்திருக்கிறது. மக்களைக் காப்பது அரசின் பொறுப்பு என நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல என கட்டமாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, பூமியை மீட்போம் என்கிற கோஷத்தோடு […]
கொரோனா தொற்றுநோயால் ஆறு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட பின்னர் இன்று காலை பக்தர்களுக்காக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஒரு சில பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பிரார்த்தனை செய்தனர். மேலும், நேற்று மாலை மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்ட இந்த கோயில், பக்தர்கள் அக்டோபர் 21 வரை பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட சந்நிதானம் பக்தர்களுக்கு பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டது என்று கோயிலின் திருவிதாங்கூர் […]
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,608 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று 1,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது. 14,891 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் கொரோனாவிலிருந்து 803 பேர் குணமடைந்தனர். இதுவரை 27,779 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
108 முறை ஓம் நமோ நாராயநாய என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து ஜெபம் செய்தால் கொரோனா தானாக ஓடிவிடும். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் செய்தியாளருக்கு பேட்டி அளிக்கும்போது கூறுகையில், கொரோனா காலத்தில் அரசாங்கம் நன்றாக பணியாற்றி வருகின்றனர் என்றும் தமிழக அரசு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தமிழகத்தில் அனைத்து கோயில்களும் திறக்கப்பட வேண்டும். அனைத்து கோயில்களும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 1108 முறை […]
கொரோனா நெருக்கடியில் தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் தனது சம்பளத்தை குறைக்க தயாராக உள்ளதாக கீர்த்தி சுரேஷ் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஹரிஷ் கல்யாண், விஜய் ஆண்டனி, மகத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைக்க தயாராக […]
தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாள்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .இதனால் பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள்,அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர் ஆகியோருக்கு நிவாரண உதவித் தொகையும் , அதிகரிக்கும் வழங்கி வருகிறது. […]