கன்னியாகுமரியில் ஒரே நாளில் உயிரிழந்த 3 பேர் – கொரோனா இல்லை

க ன்னியாகுமரி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரியஜான்.  இவருக்கு வயது 66 .இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு திரும்பியுள்ளார். இதனால் கொரோனா அச்சம் காரணமாக இவர் வீட்டில் தனிபடுத்தப்பட்டிருந்தநிலையில் அவருக்கு தொடர்ந்து இருமல், காய்ச்சல் இருந்ததால் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் … Read more

இந்தியாவில் 151 லிருந்து 169 ஆக அசுர வேகம் எடுத்த கொரோனா.!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற கொவிட்-19 வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. கொரோனோ வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.  இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் … Read more

கொரோனா அச்சுறுத்தல் ! சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை – முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா அச்சுறுத்தலால் தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க பேரவையில் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அவர் பேசுகையில்,கொரோனா அச்சுறுத்தலால் தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார். போதுமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படாது .சட்டப்பேரவைக்கு வரும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார். 

#BREAKING: கொரோனா தடுப்பு நடவடிக்கைளை முடுக்கிவிட ரூ.60 கோடி ஒதுக்கீடு – முதல்வர் அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைளை முடுக்கிவிட ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் வருகிறது. தற்போது இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது.கொரோனா வைரசால் இந்தியாவில்  இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை முடுக்கிவிட ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

#BREAKING : கொரோனா வைரஸ் ! தொற்று நோயாக அறிவித்து அரசிதழில் வெளியீடு

  கொரோனா வைரஸ் பாதிப்பை தொற்று நோயாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.   கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய அரசு,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரிக்கெட் போட்டிகள்,கால்பந்து போட்டிகள் உள்ளிட்ட பல போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது.இதனால் மத்திய அரசு  ஒவ்வொரு மாநிலமாக கொரோனா பரவுவதையடுத்து பேரிடராக  அறிவித்தது.   இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தொற்று நோயாக … Read more

கொரோனோ காலர் டியூன்! அந்தந்த மாநில மொழிகளில் ஒலிபரப்ப வேண்டும் – கனிமொழி கோரிக்கை

மத்திய சுகாதார துறைக்கு கோரிக்கை திமுக எம்.பி. கனிமொழி ஒன்றை விடுத்துள்ளார். ஜியோ நிறுவனம்  கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த  காலர் டியூன் முறையை கையாண்டு வருகிறது.எந்தவொரு நெட்வொர்க்கிலிருந்தும் ஜியோக்கு அழைக்கும் போது ஒருவர் இருமுவது போன்று சத்தத்துடன் கொரோனா பற்றிய விழிப்புணர்வு அந்த காலர் டியூனில் ஆங்கிலத்தில் சொல்லப்படும்.  Automatic awareness voice message on #CoronavirusOutbreak when we make calls is a welcome step. Would be even more … Read more