ஒடிசாவில் மதம் சார்ந்த இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் வரும் ஜூன் 30 தேதி மூடப்படுகிறது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது .மேலும் ஷாப்பிங் மால்கள் ஜூன் 30 வரை மூடப்பட்டிருக்கும் எனவும் உணவகங்கள் திறந்திருக்கும் ஆனால் அங்கு சென்று உணவருந்த அனுமதி கிடையாது .ஜொமாடோ மற்றும் ஸ்விகி போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் வழியாக உணவை வழங்கவோ அல்லது உணவை எடுத்துச் செல்லவோ அனுமதிக்கப்படும் என்று ஒடிசா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .
ஒடிஷா மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 352ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 62,939 பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அம்மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 352ஆக உயர்ந்துள்ளது. மேலும், அம்மாநிலத்தில் 68 பேர் கொரோனா வைரஸ் தாக்கதலிருந்து முற்றிலுமாக குணமடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் முகக்கவசம் அணிந்து வருபவர்களின் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கு வரும் 14ம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், ஒடிசா மாநிலத்தில் மார்ச் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்திருந்தார். மேலும் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனாவால் இன்று வரை 5,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 473 பேர் குணமடைந்துள்ளதாகவும் , 166 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரிசாவில் கொரோனாவால் 42 பேர் பாதித்துள்ள நிலையில் இதுவரை ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இன்று ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் மாநில அமைச்சரவைக் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த 25-ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4067 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 292 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா 690, தமிழ்நாடு 571, டெல்லி 503, தெலுங்கானா 321, கேரளா 314 ஆகிய மாநிலங்கள் […]