கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி வரும் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் மூலமாக கொரோனா பாதிப்பு அதிகமாகி வந்தது.இதனால் மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக காய்கனி சந்தை திறக்கப்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு மொத்த சந்தையை திறக்க கோரி, வணிக சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் திங்கள் கிழமை […]
தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை ஆக-31 ம் தேதி வரை நீட்டிப்பு. தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.அதன்படி, பல்வேறு கட்டுப்பாடுகளும், தளர்வுகளுடனும் ஆகஸ்ட் 31 -ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும். அந்த வகையில் சுற்றுலா தளங்கள், அனைத்து மதம் சார்ந்த கூடங்கள் […]
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஊரடங்கை ஜூலை 31 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த உத்தரவின்படி, மால்கள், முடிதிருத்தும் கடைகள், மதம் சார்ந்த இடங்கள், ஜிம், கல்வி நிறுவனங்கள் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மாநில தலைமைச் செயலாளர் சுக்தேவ் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நேரத்தில் நடைமுறையில் உள்ள […]
சென்னை உட்பட நான்கு மாவட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரத் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதில் அவர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதில், அத்தியாவசிய […]
சென்னை உட்பட நான்கு மாவட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அங்கு உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும். சென்னையில் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதில் அவர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதில், அத்தியாவசிய […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது .கொரோனவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகள் கொரோனா பற்றிய தகவல்களை 24 மணி நேரத்திற்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் அரசு/ தனியார், அலுவலகங்கள்/மருத்துவமனைகள், […]
இந்தியாவில் வைரஸ் அதிகம் பரவிய மாநில முதல்வர்களின் தடுப்பு நடவடிக்கை மற்றும் தீவிரமாக கட்டுப்படுத்துவது குறித்து இன்று பிரதமர் மோடி கான்பரன்சிங் மூலாமக ஆலோசனை நடத்துகிறார். உலகளவில் 9 லட்சத்தை கடந்து மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 47 ஆயிரம் பேரை காவு வாங்கி வருகிறது.இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரிக்க துவங்கி உள்ள நிலையில் 1834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 457 பேருக்கு […]
வீட்டு உரிமையாளர்கள் வாடகை கேட்டு வற்புறுத்தக்கூடாது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகைகள் எடுத்து வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் . புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை […]
21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக நேற்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.மேலும், இந்த 21 நாட்கள் ஊரடங்கில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு கிராமமும் முழுமையாக அடைக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவின் காரணமாக மறுஉத்தரவு வரும் […]