இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுபானம் வாங்க வரும் பொதுமக்கள் கட்டாயம் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அன்று முதல் மதுக்கடைகளும் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து ,கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட மதுக்கடையை திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இதனால், டெல்லி, கர்நாடக, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவு […]