கொரோனா தொற்று குறைந்து வருவதால் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.அதன்படி,பள்ளிகள், கல்லூரிகளில் இன்று முதல் 6 நாட்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை தவிர) முழுமையாக வகுப்புகள் நடைபெற உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் புதுச்சேரியில் கடந்த ஜனவரி 10 முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து,கடந்த ஜனவரி 18 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில்,கொரோனா […]
புதுச்சேரி 100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாறும் என கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கூறியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாநிலங்களிலும் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோல புதுச்சேரியிலும் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும், கொரோனா தொற்றை ஒழிக்கும் விதமாகவும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக புதுச்சேரியில் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவண்டார்கோயிலிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி திருவிழா இன்று நடைபெற்றுள்ளது. […]