மும்பையில் ஒரே நாளில் 1,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
மும்பையில் மேலும் 1,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மகாராஷ்ட்ரா மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மும்பையில் ஓரே நாளில் 1,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,27,571 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு ஒரே நாளில் 884 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,00,954 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொருத்தளவில், இன்று 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,988 ஆக […]