தமிழகம் முழுவதும் 2356 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வந்த நிலையில்,கடந்த சில தினங்களாக குறைந்து காணப்பட்டது.ஆனால்,இன்று மீண்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அதே சமயம்,தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில்,படிப்படியாக குறைந்து வருகிறது.அதன்படி,கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது.அதே சமயம்,கொரோனா இறப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,மாநிலம் முழுவதும் கொரோனா […]
கொரோனா பரவல் காரணமாக இன்று (ஜன.26ம் தேதி) கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக இன்று (ஜன.26ம் தேதி) கிராம பஞ்சாயத்துகளில் எந்த ஒரு கிராம சபை கூட்டத்தையும் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “மாநிலத்தில் நிலவும் கொரோனா […]
சென்னை:தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழக்கின்றனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் 19 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது: “சென்னையில் 1600 இடங்களில் காலை 9 […]
தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.எனினும்,கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.அந்த வகையில்,சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில்,கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் […]
கடந்த 2 வாரங்களாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில்,நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,இன்று இரவு முதல் திங்கள் அதிகாலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில்,இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,இரவு […]
மதுரை:தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து,அமைச்சர் மூர்த்தி அவர்கள் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக முதலமைச்சர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக தற்போது நடைபெற்ற மதுரை மாவட்டத்திற்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி அவர்கள் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. […]