டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் குறைந்து வருகிறது. இன்று முதல் டெல்லியில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கம் இந்தியா முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நாளொன்றுக்கு 28,000 பேர் பாதிக்கப்படும் அளவிற்கு கொரோனாவின் தாக்கம் உச்சத்தை தொட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், நேற்று […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. இந்தியா வெளியிட்டுள்ள திங்கள்கிழமை அறிக்கையின்படி 3,68,147 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதித்துள்ளது, மேலும் தொற்று காரணமாக 3,417 பேர் இறந்துள்ளனர். தற்போது இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு 1,99,25,604 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 3,00,732 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,29,3003 ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில், […]
மத்திய அரசு நேற்று UNLOCK 3.O என்று தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவித்தது .இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு வியாழக்கிழமை ‘அன்லாக் 3.0’ க்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அன்லாக் 3.0’ க்கான வழிகாட்டுதல்களை வெளியிடும் அதே வேளையில், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கை தளர்த்தப்போவதாக அறிவித்துள்ளது . எதற்கெல்லாம் தளர்வுகள் : சமூக இடைவெளிகளுடன் வாரச்சந்தை 7 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக […]
டெல்லியில் நேற்று மட்டும் 1,163 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .இதுவே ஒரே நாளில் உயர்ந்த அதிகபட்ச எண்ணிக்கையாகும் .டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,549 ஐ எட்டியுள்ளது.8,075 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 416 பேர் உயிரிழந்துள்ளனர் . இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் அரவிந் கெஜ்ரிவால் கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் எத்தனை காலி படுக்கைகள் இருக்கின்றன என்று அறிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .மேலும் டெல்லி அரசானது கொரோனாவை விட […]