கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் அனைத்து மாநில தலைநகரங்களிலும் 3 பகுதிகளாக நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி பணிகளில் பல நாடுகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.இதில் சில நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் நான்கு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எப்படி கொரோனா தடுப்பூசி எடுத்து செல்லப்படும்..? […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால், நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீடிப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனிடையே இந்தியாவில் இதுவரை 10363 பேர் பாதிக்கப்பட்டு, 339 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1036 பேர் குணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரசால் […]
ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடையும் நிலையில், தற்போது பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. இதனிடையே ஒடிஷா, பஞ்சாப் மஹாராஷ்டிரா, தமிழகம், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது. எனவே ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடையும் நிலையில், கொரோனாவை தடுக்க ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். கொரோனாவை ஒழிக்க […]