21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக நேற்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.மேலும், இந்த 21 நாட்கள் ஊரடங்கில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு கிராமமும் முழுமையாக அடைக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவின் காரணமாக மறுஉத்தரவு வரும் […]
முதலில் சீனாவில் தொடங்கி, தற்போது மற்ற நாடுகளில் பரவலாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயானது, உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. யாருக்காயின் சளி, இருமல் போன்ற பிரச்சனை ஏற்பட்ட உடன், நமக்கு கொரோனா தோருக்கு இருக்குமோ என்ற சந்தேகமும் வந்துவிடுகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தில் மூலிகை மருந்து சாப்பிட்ட தாய், மகன்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேருக்கும் உசிலம்பட்டி […]
சென்னையிலுள்ள 3000 வீடுகள் தனிமைப்படுத்தவுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடுகளிருந்து திரும்பியவர்கள் வீடுகளிலிருந்து “தனிப்படுத்தப்பட்டவர்கள்” என்று ஸ்டிக்கர் ஒட்டப்படும் எனவும், தனிப்படுத்தப்பட்டவர்கள் வெளியே நடமாடினால் அவர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.