இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஒரு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 11,651 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு நாளில் 289 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று 6,396 ஆக இருந்த நிலையில், இன்று 5,921 ஆக குறைந்துள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா […]
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,100பேர் கொரோனாவிலிருந்து மீண்டு, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,887 ஆக குறைந்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். அந்த வகையில் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 1,100க்கும் மேற்பட்டோர் மீண்டு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,887ஆக குறைந்துள்ளது. அதாவது, […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,439 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1306 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது .கொரோனவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகள் கொரோனா பற்றிய தகவல்களை 24 மணி நேரத்திற்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் அரசு/ தனியார், அலுவலகங்கள்/மருத்துவமனைகள், […]