கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொடும் என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனதின் குழு எச்சரிக்கை. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கமே இன்னும் முழுமையாக முடியாத நிலையில், கொரோனா மூன்றாவது அலையின் பாதிப்பு பற்றி பலரும் பேச ஆரம்பித்து விட்டனர். கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணா்கள் சிலா் எச்சரித்துள்ளனா். ஆகவே, மருத்துவமனைகளில் குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவுகளை வலுப்படுத்த தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. […]
கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் குறித்து நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மூன்றாவது அலை எதிர்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை செயலாளர் நாளை காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறைய தொடங்கிய நிலையில், தமிழக அரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் […]