வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தீவிர கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்திலும் சற்று உயர்ந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 57,356 ஆக உள்ளது . இதனை கருத்தில் கொண்டு, தொற்று மேலும் பரவாமல் இருக்க வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தீவிர கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டத்தில் இருக்கும் அனைவரும் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக,தமிழகத்தில் நேற்று புதிதாக 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்,உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை வல்லுநர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய […]
நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்ட நிலையில்,கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.இதனைத் தொடர்ந்து,கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் சற்று சரிந்து காணப்பட்டதால் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன.இந்த நிலையில்,கொரோனா தொற்று வழக்குகள் தற்போது மீண்டும் அதிகரித்து ஒரு நாளில் 2,483 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட தரவுகளின்படி,இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1399 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்,அதே நேரத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 15,636 […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர்,தலைமைச் செயலாளர்,வருவாய் பேரிடர் நலத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைளை கடுமையாக்குவது தொடர்பாக முதல்வர் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். அதே சமயம்,நாடு முழுவதும் […]
நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு,பின்பற்ற வேண்டிய கொரோனா கட்டுபாடுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 27 ஆம் தேதி (புதன்கிழமை) அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இதனிடையே,தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர்,தலைமைச் செயலாளர்,வருவாய் பேரிடர் நலத்துறை […]
நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்ட நிலையில்,கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.இதனைத் தொடர்ந்து,கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் சற்று சரிந்து காணப்பட்டதால் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன.இந்த நிலையில்,கொரோனா தொற்று வழக்குகள் தற்போது மீண்டும் அதிகரித்து ஒரு நாளில் 2,527 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட சனிக்கிழமை தரவுகளின்படி,இந்தியாவின் மொத்த கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 4,30,54,952 ஆக உயர்ந்துள்ளது,அதே நேரத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 15,079 ஆக […]
தமிழகத்தில் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில் தொடங்கியதில் ,அதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.இந்த வேளையில்,கொரோனா பரவலின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில்,கட்டுப்பாடுகளை நீக்கிக் கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இந்நிலையில்,தமிழகத்தில் இதுவரை இருந்த பெரும்பாலானகொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என தமிழக […]