கொரோனா பராமரிப்பு உதவிக்குறிப்புகள்: கொரோனா என்ற உலகளாவிய தொற்றுநோய் மக்களின் மத்தியில் ஆரோக்கியத்தை நோக்கி பீதியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, கொரோனாவிலிருந்து குணமானவுடன், மக்கள் மீண்டும் இரையாகலாம். குணமடைந்த பிறகு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளவர்களுடன் இது குறிப்பாகக் காணப்படுகிறது. டயட்: கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு உங்கள் உணவைப் பற்றி கவனக்குறைவாக இருக்காதிங்க. உணவில் அதிக புரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்காக, உங்கள் உணவில் பயறு, பச்சை பீன்ஸ் அல்லது […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,14,507 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் இன்று 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,718 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5,596 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,58,534 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஒரே நாளில் 3,026 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,026 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 13 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் 372 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், 23,217 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவிலிருந்து இன்று 1,862 பேர் குணமடைந்தனர். இதுவரை 68,863 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள் என கேரள சுகாதாரதுறை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 3.13 லட்சம் பேர் மீண்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக 5,980 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,73,410 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5,603 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,13,280 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 80 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,420 ஆக உயர்ந்துள்ளது.