தானேவுக்கு அடுத்த உல்ஹாஸ்நகர் நகரில் கொரோனா பாதித்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்றதால், 18 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானேவுக்கு அடுத்த உல்ஹாஸ்நகர் நகரில் 40வயது பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அப்பெண்ணிற்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால், கடந்த மே 25ஆம் தேதி அப்பெண்ணின் உடலை உரிய பாதுகாப்பு வசதிகளோடு அடங்கிய பெட்டியில் வைத்து குடும்பத்தாரிடம் கொடுத்துள்ளனர். ஆனால், உறவினர்கள் அப்பெண்ணின் உடலை வெளியே எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், இறுதிச்சடங்கில் […]
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 13,000 எட்டியதுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,487 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்தம் எண்ணிக்கை 40, 236ஆக உயர்ந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 10,887 பேர் குணமடைந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 1,307ஆக உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று (மே 3) மட்டும் 678 பேருக்கு கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை […]
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 790 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 12296ஆக உயர்வு இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 37776 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 10018 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 1223 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்,இந்தியாவில் மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது. நேற்று(மே 2) ஒரே நாளில் […]
மகாராஷ்டிரா – ஒடிசா 1700 கி.மீ மிதிவண்டியில் 7 நாட்கள் பயணித்து சொந்த ஊருக்கு சென்ற இளைஞர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சமூக தொற்றை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லியில் பணியாற்றிய ஒடிசாவை சேர்ந்த இளைஞர் மகேஷ் ஜனா கொரோனா ஏப்ரல் 1ம் தேதி மிதிவண்டியில் சொந்த புறப்பட்டார். அவர் 7 நாட்களில் 1700கி.மீ கடந்து சொந்த ஊர் ஒடிசா வந்தடைந்தார். […]
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4281 ஆகவும், உயிரிழப்பு 11 ஆகவும் உயர்ந்துள்ளது. இருப்பினும் 319 பேர் குணமடைந்துள்ளார்கள். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 748, தமிழ்நாடு 621, டெல்லி 503, தெலுங்கானா 321, கேரளா 314, உத்தரபிரதேசம் 305 ஆகிய மாநிலங்களில் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் புதிதாக 120 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 748 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதித்தவர்கள் எண்ணிக்கை 868 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து […]
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 3374 ஆகவும், பலி எண்ணிக்கை 77 ஆகவும் உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 267 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலம், மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 2902 ஆகவும், பலி எண்ணிக்கை 68 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலம், மகாராஷ்டிரா 423, தமிழ்நாடு 411, டெல்லி […]