சென்னை:இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில்,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக,வணிக […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில்,தமிழகத்தில் நேற்று புதிதாக 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்,உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வந்த நிலையில்,இன்று கொரோனா தொற்று இரண்டாயிரத்துக்கும் கீழ் சரிந்துள்ளது. இந்நிலையில்,சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.40 மாணவர்களை பரிசோதனை செய்ததில் தற்போது 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் 6 மாணவர்களும் தனிமைப் படுத்தப்பட்டுளனர் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக,சென்னை ஐஐடியில் இதே போல் […]
தமிழகத்தில் இன்று மட்டும் 8,449 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 71 ஆயிரத்து 384 அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து இடங்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டாலும், மக்களை தடுப்பூசி போடுமாறும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்குமாறும்,கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்குமாறும் அரசு அறிவுறுத்தி வருகிறது. தமிழகத்தில் இன்று […]
கொரோனா மட்டுமின்றி மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 108 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 116 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,293 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 108 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,850 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் மொத்தமாக 3,49,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 121 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6007 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5850 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 2,89,787 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை […]
தமிழகத்தில் கொரோனாவில் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் 4,058 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1,485 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று (மே 5) ஒரு நாளில் தமிழகத்தில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் 2,745 ஆண்கள்,1,311 பெண்கள் மற்றும் 2 திருநங்கைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை கொரோனா பாதிப்பில் […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தற்போதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738-ஆக உள்ளது. இதனால், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் தங்கள் மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில், தற்போது புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இனி 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் திறந்திருக்க அனுமதி. ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் காலை 6 மணி முதல் 10 […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, கடந்த ஞாயிற்று கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, அகல்விளக்கு ( அ ) டார்ச் லைட் ஏரியசெய்து கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒற்றுமையாக செயல்படுவோம் என கேட்டுக்கொண்டார். அதன்படி, இந்தியாவில் பெரும்பாலானோர் தங்களது வீட்டில் அகல்விளக்கு ஏற்றி ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் முருகன், ‘ தேச நலனுக்காக தமிழக மக்கள் தங்களிடம் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இந்நிலையில், தாய்லாந்து நாட்டிலிருந்து 6 பேரில், சுற்றுலா விசா மூலமாக இந்தியா வந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொள்ளம்பாளையத்தில் மதபிரச்சார கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் மூலமாக இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலருக்கும் கொரோனா தொற்று அறியப்பட்டது. இதனால் இவர்கள் 6 பேர் மற்றும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அமலில் இருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிய அறிவிப்புகளை அவ்வப்போது அறிவித்துள்ளது. அதன்படி, விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக மாவட்ட, மாநில அளவில் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. காய்கறி, பழங்களை குளிர்பதன கிடங்குகளில் வைப்பதற்கான பயன்பாட்டு கட்டணம் வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை வசூலிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக்கிக்கொண்டே வருகிறது. தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று மட்டும் 86 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு மொத்தமாக 571 -ஆக உயர்ந்துள்ளது. இதில் ஊரடங்கிற்கு முன்னதாக ஒற்றை இலக்கங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு, அதன் பிறகு இரட்டை இலக்கம், மூன்று இலக்கம் என நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. மார்ச் மாத இறுதி வரை 124-ஆக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஏப்ரல் 5 தேதிகளிலேயே 447 பேருக்கு […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு 1000 ரூபாய் நிவாரண தொகை அறிவித்து இருந்தது. அதனை வழங்கும் பணி அண்மையில் தொடர்ந்தது. மேலும், ரேஷன் கடைகளில் வரும் கூட்ட நெரிசலை தவிர்க்க பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதில் குறிப்பிட்ட நேரத்திற்கு சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரண தொகை வாங்கிக்கொள்ளுமாறு பணித்தது. இதன்படி, ‘ நிவாரண தொகைவழங்கும் பணி இதுவரை 79.48 […]
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 2-ஆம் இடத்தில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கை கடுமையாக பின்பற்றுவது, பொதுமக்களின் சமூக இடைவெளி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது என அரசு தீவிர முயற்சி எடுத்துவருகிறது. இந்நிலையில் சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் கபசுர குடிநீரை பருகவும் மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், […]
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் அரியங்குப்பம் பகுதியில் வசிக்கும் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதால், அங்கு பணியில் இருந்த 21 காவலர்கள் தற்போது பணிக்கு வரவேண்டாம் என கூறி தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. நேற்றுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக இருந்த நிலையில் இன்று மட்டுமே 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 485ஆக உயர்ந்துள்ளது. இதில் 422 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பாதிக்கப்பட்ட 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவார். இதுவரை 90,541 பேர் வீட்டு […]
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் தற்போது வரை 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்துவருகின்றனர். கொரோனாவால் இருவர் பலியாகியுள்ளார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் தவிர சில தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாம்.
கொரோனா பாதிப்பு காரணமாகா நாடு முழுவதும் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக, அரசின் நலதிட்டங்கள் பெற என உரிய காரணங்களோடு வெளியே வருகின்றனர். இத்தனையும் கட்டுப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓர் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதன் படி, திண்டுக்கல் மாவட்டத்தில், ஊரடங்கை மதித்து வீட்டிலேயே இருக்கும் நபர்களுக்கு குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு முதல் பரிசாக பிரிட்ஜ், இரண்டாம் […]
தமிழகத்தில் இன்று மாட்டும் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 309இல் இருந்து 411ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 81 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களான திண்டுக்கல்லில் 43 பேருக்கும், ஈரோட்டில் 32 பேருக்கும், கோவையில் 29 பேருக்கும், தேனியில் 21 பேருக்கும், நாமக்கல்லில் 21 பேருக்கும், கரூரில் 20 பேருக்கும், செங்கல்பட்டில் 18 பேருக்கும், மதுரையில் 15 பேருக்கும், விழுப்புரத்தில் 13 பேருக்கும், திருவாரூரில் 12 […]
சீனா உஹான் நகரில் புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் சுமார் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் திணறி வருகிறது. இதனால் உலக நாடுகள் ஒன்றாக சேர்ந்து கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராடி வருகின்றனர். இதனிடையே உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 10,18,920 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,292 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த சோகத்திலும் […]