மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் குருபிரசாத் மொஹாபத்ரா கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார். மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) செயலாளர் டாக்டர் குருபிரசாத் மொஹாபத்ரா,கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் டாக்டர் குருபிரசாத் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.எனினும், சிகிச்சை பலனின்றி குருபிரசாத் […]
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களா நீங்கள், உங்களை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். பல்வேறு மாநில அரசுகள் மருத்துவமனையில் படுக்கையறை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளை அனுமதிக்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை […]
சகோதரர் ராகுல் காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியை அறிந்து கவலை அடைந்தேன் என முக ஸ்டாலின் ட்வீட். லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று தனக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள் என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து பிரதமர் மோடி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுல் காந்தி விரைந்து நலம்பெற பிரார்த்திக்கிறேன் என்றும் நல்ல ஆரோக்கியத்துடன் […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ளார். அதில், லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று தனக்கு உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே, ராகுல் காந்தி மேற்கு வங்கம் சென்று ஒரு நாள் முழுவதும் தொடர்ச்சியாக பரப்புரையில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் […]