குஜராத் மாநிலத்தில் மேலும் ஒரு முதியவர் கொரோனவால் உயிரிழந்துள்ளார். குஜராத்தில் பஞ்சமஹால் மாவட்டத்தைச் சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக வதோதராவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் என சுகாதார முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி தெரிவித்துள்ளார். இதனால் குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 88-லிருந்து 95-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 பேர் கொரோனா வைரஸிலிருந்து […]