உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு நாடுகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அவரது ட்விட்டர் பக்கத்தில் விடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா இருப்பதால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், இங்கிருந்தே அலுவலக பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார். […]