கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தற்போது பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பலரும் இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு அனைவரும் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது நடிகர் விஷால், மக்கள் அனைவரும் அரசின் விதிகளை பின்பற்றி நடங்கள். மேலும், அவர்களின் வீடு குடும்பங்களை மறந்து உண்மையாக பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், துப்பரவு பணியாளர்கள் மற்றும் காவல்துறை குழுக்களுக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார். . […]
கொரோனா வைரஸ்க்கு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தற்போது அந்த நோயிலிருந்து குணமாகி செல்கின்றனர். எனவே இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ள படுகிறது. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை உடல் வெப்பநிலை மற்றும் நோய்களை கண்டறிந்து தான் நாட்டிற்குள் அனுமதித்து வருகின்றனர். இவ்வாறு உடல் வெப்பநிலை கணிக்கும் கருவியில் தங்களது உடல் வெப்பநிலை குறைவாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக பரசிட்டமோல் மாத்திரையை சிலர் உட்கொண்டுள்ளனர். இந்நிலையில் அவ்வாறு இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த ஒருவர் […]
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது உலகின் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை அனைத்து சந்தைகள், மீன் கடைகள், ஆலயங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்துமே மூடப் பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து திருவண்ணாமலையிலும் இது குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற 31-ஆம் தேதி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தையும் மூடப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.