உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். சென்னை ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழ்நாடு முழுவதும் இன்று 26-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 50,61,287 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.34 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர். […]