கொரோனா தடுப்பூசி மையங்கள் அருகில் இருப்பதைக் கண்டறிய மத்திய அரசானது வாட்ஸ்அப் தகவல் உதவி மையத்தை தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையானது தொடர்ந்து தீவிரமாகப் பரவி வருகிறது.எனவே,கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிதல் மற்றும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுதல் ஆகியவைதான் சிறந்த வழி என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து,கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 முதல் 65 […]