கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பட்சத்தில், மகராஷ்டிராவில் ஏற்பட்ட நிலைதான் தமிழகத்திலும் ஏற்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வந்தாலும், மக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பதில் இருந்து தவறி வருகின்றனர். இந்நிலையில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள், இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக 450-க்கும் குறையாமல் கொரோனா […]