கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் வாங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சர் பதவியேற்ற திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்ற அன்றைய தினமே குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். இந்த தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டது. முதல் தவணையாக ரூ. 2,000 வழங்கப்பட்டது. இரண்டாவது தவணையாக ரூ.2,000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் மக்களுக்கு நியாயவிலை […]
குடும்ப அட்டை மற்றும் நலவாரிய அட்டை இல்லாத 3 ஆம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண தொகை வழங்குவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த,கிரேஸ் பானு என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ,ரேஷன் அட்டை மற்றும் நலவாரிய அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும்,கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்க,அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து,இந்த வழக்கானது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, […]