நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,கொரோனா நோயாளிகளால் மருத்துவமனை நிரம்பி காணப்பட்டது.இதன்காரணமாக,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.இதனால்,தற்போது கொரோனா பரவல் அதிக அளவில் குறைந்து உள்ளது. இந்நிலையில்,சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால் ராஜீவ்காந்தி […]
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி பொறுத்தப்பட்ட பேருந்து சேவை திட்டத்தை நேற்று சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருவதால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிகையும் அதிகரித்து காணப்படுகிறது.இதனால் டெல்லி, உத்திரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைப்போன்று,தமிழகத்திலும் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.இதனால்,ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில்,ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பானது (ஜிட்டோ) சென்னை மாநகராட்சியுடன் […]
புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிபிரியா கங்குஜாம்,நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் நெருக்கடிக்கு உதவுவதற்காக தனது சொந்த சேமிப்பிலிருந்து ஆக்ஸிஜன் தரும் மெஷின்களை வாங்கியுள்ளதாக வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார். “இந்தியாவின் கிரெட்டா” என்று செல்லமாக அழைக்கப்படும் மணிப்பூரைச் சேர்ந்த 9 வயதான லிசிபிரியா கங்குஜாம்,பெரும்பாலும் காற்று மாசுபாட்டிற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து அடிக்கடி குரல் எழுப்பி வருபவர்.மேலும் இயற்கை வளங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்துரைப்பவர். இதனைத் தொடர்ந்து லிசிபிரியா கங்குஜாம்,விருதுகள் மூலம் தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை சேமித்து […]
குஜராத்தில் உள்ள ஆயுஸ் எனும் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் உள்ள ஐ.சி.யு வார்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் அங்கிருந்த 16 கொரோனா நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனைகள் படுக்கை வசதி இல்லாத காரணங்களாலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க குஜராத்தில் உள்ள […]
கொரோனா நோயாளிகளை கட்டிப்போட்டு சென்னையில் நடந்த நகை கொள்ளை. சென்னை தியாகராயநகரில் சாரதாம்பாள் எனும் தெருவில் உள்ள யாகூப் என்பவர் குடும்பத்தில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவர்கள் குடும்பத்துடன் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில் அவரது வீட்டில் அனைவரும் குடும்பத்தோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மர்ம கும்பல் அனைவரையும் கட்டிப் போட்டு வீட்டில் இருந்த 95 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், 250 சவரன் நகைகளையும் மற்றும் வீட்டு வாசலில் இருந்த கார் […]