கொரோனா அச்சத்தால் அரை நூற்றாண்டுக்கு பின்னர் முதல் முறையாக நோபல் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. விஞ்ஞானம், இலக்கியம் ஆகியவற்றின் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருது தான் நோபல் பரிசு. 1901-முதல் ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான ஆல்பர்ட் நோபல் அவர்களால் உருவாக்கப்பட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 2020-ம் ஆண்டின் நோபல் பரிசுக்கான விருந்து ரத்து செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை செவ்வாயன்று ஸ்வீடிஷ் நாளேடான டேஜென்ஸ் […]
ரயில்வே நிர்வாகம் 50 சதவீத காலியிடங்களை குறைக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு இந்திய ரயில்வே துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேதுறையில் அதிகமான தொழிலாளர்களை கொண்ட ஒரு அரசு துறையாகும்.இதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் ரயில்சேவையானது முடங்கியது. தற்போதைக்கு சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொருளாதார ரீதியில் அத்துறையானது பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் 50 சதவீத காலியிடங்களை குறைக்கவும், […]
கொரோனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உலகளவில் 99 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா,உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தற்போது 100 லட்சத்தை எட்ட வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன்படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 98,98,220ஆக உயர்ந்துள்ளது; இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 53,52,383ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,96,077ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை […]
நாடு முழுவதும் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா மற்றும் ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’ என்கிற நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு, ‘நீட்’ நுழைவு தேர்வு, மே, 3ல் நடைபெற்று இருக்க வேண்டும் ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக ஜூலை., 26க்கு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் […]
1000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 6 விமானங்களை ஏற்பாடு செய்து அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் உதவி செய்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் பலரும் நடந்து […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதலாக ரூபாய் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட பேரவையில் அறிவித்துள்ளார். ஏற்கனவே ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்ட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட பேரவையில் அறிவித்துள்ளார்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.31,696-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 உயர்ந்து, ரூ.3,962-க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.33,272-க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை கிராமுக்கு 80 பைசா குறைந்து, ரூ.43.20 விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து, […]
கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க டாஸ்மாக் மதுக்கடைகளில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவிற்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சுகாதாரமற்ற முறையில் பார்கள் இயங்குகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.