கொரோனா ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் தேசிய நினைவகம் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த பல மாதங்களாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள் மற்றும் முக்கியமான இடங்கள் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து சுற்றுலா தலங்கள் சிலவற்றை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், அப்துல் கலாம் நினைவாக இந்திய […]
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் திறப்பதற்கு பஞ்சாப் அரசு அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒவ்வொரு நாடுகளிலும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் பஞ்சாபில் கொரோனா பரவல் அதிகரித்ததன் […]
கருப்பு தினமான நாளை வன்முறை நடக்கும் அச்சம் உள்ளதால் இன்று மற்றும் நாளை ஸ்ரீநகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து அகற்றப்பட்ட தினமான ஆகஸ்ட் 5ஐ கருப்பு தினமாக கொண்டாடப்பட உள்ளதால் வன்முறை சம்பவங்கள் நடக்கும் அச்சம் உள்ள காரணத்தால் ஸ்ரீநகரில் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆம் ஸ்ரீநகரில் இன்று (ஆகஸ்ட் 4) மற்றும் நாளை (ஆகஸ்ட் 5) ஆகிய இரு நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்ரீநகரின் மாவட்ட மாஜிஸ்திரேட் […]
2 மாதத்திற்கு பின் உயர்நீதிமன்ற மதுரை கிளை திறக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இதுவரை கொரோனா வைரஸால் தமிழகத்தில், 22,333 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 173 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், மதுரை உயர்நீதிமன்ற கிளை மூடப்பட்டிருந்த நிலையில், 2 மாதங்களுக்கு பின் தற்போது திறக்கப்ட்டுள்ளது. மேலும், அரசு அறிவுறுத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் உயர்நீதிமன்ற கிளையில் […]