ஜார்கண்ட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியானது,கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது ஊழியரை வேலைக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின்,போகாரோவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரியும் அரவிந்த் குமார் என்பவர்,கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இதனால்,கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைந்து வீடு திரும்பினார். இருப்பினும்,அவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக வீட்டில் ஆக்ஸிஜன் உதவியுடன் இருந்து வருகிறார்.அதனால்,மெடிக்கல் லீவ் வேண்டுமென்று […]