தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா சிகிக்சைக்காக சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் 127 கோடி மதிப்பிலான 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் உருவாக்கப்பட்டது. இந்த சிறப்பு மருத்துவமனையை முதல்வர் திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை முழுக்க முழுக்க நவீன கருவிக்கள் […]
தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,276 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்துள்ளது. இன்று 842 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 27,624 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்று மட்டும் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1138 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 24547 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 44661 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 38 பேர் பலியாகிய நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1138 […]
சென்னை உட்பட 4 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பேருந்துகள் ஓடவில்லை. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர பிற இடங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் தர்மராஜ் அறிவித்துள்ளார். மேலும், பேருந்தில் 60 சதவீத பயணிகளை ஏற்றிச்செல்ல […]
திருச்சியில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2135ஆக அதிகரித்துள்ளது. தற்போது 6,520 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், திருச்சியில் நேற்று மட்டும் 2 பேருக்கு கொரோனா உறுதி […]
தமிழகத்தில் முதற்கட்டமாக 30 ஆந்திர மாநிலத்தவர்கள், 20 கேரளத்தவர்களை அவரவர்களின் சொந்த ஊருக்கு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கபட்டுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுதும் கடந்த 4ஆம் தேதி முதல் 3ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனா பாதிக்கப்பட்ட மற்ற இடங்களில் விதிமுறைகளுக்குட்பட்டு கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. தமிழக போக்குவரத்து கழகத்திடம் 1082 சொகுசு பேருந்துகள் உள்ளன. இதில், சிலவற்றின் மூலம் மட்டும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், அரசு அதிகாரிகளை மட்டும் அழைத்து வர பயன்படுத்தப்பட்டு […]