கர்நாடகாவில் ஓரே நாளில் 7,385 பேருக்கு கொரோனா. கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 7,385 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 2,56,975 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று 6,231 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 1,70,381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இன்று ஒரே நாளில் 102 பேர் உயிரிழந்ததால் இதுவரை […]
கொரோனா பரவும் என்ற அச்சத்தில் இறந்த முதியவரின் இறுதி சடங்கிற்கு உறவினர்கள் உதவவில்லை என்பதால் கொட்டும் மழையில் தந்தையின் உடலை சைக்கிளில் வைத்து தள்ளி கொண்டு சென்று மயானத்தில் அடக்கம் செய்த அவல சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகாவில் உள்ள பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த 71 வயதான முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுடன் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை […]
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மாவை தானம் செய்தால், அவர்களுக்கு ரூ. 5,000 நன்கொடையாக வழங்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மருத்துவர்களும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றை குணப்படுத்த மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பிளாஸ்மா சிகிச்சை என்ற முறை கொரோனாவை கட்டுப்படுத்தி நல்ல பலனை தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதன் […]
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,213 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,20,922லிருந்து 3,32,424ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,379லிருந்து 1,69,798ஆக உயர்ந்துள்ளது .கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,195ருந்து 9,520ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில், நேற்று ஒரே நாளில் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,213 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில்,கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை […]
கர்நாடக மாநிலத்தில் ஜூன் 25 ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், அனைத்து மாநிலங்களிலும் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர். இந்நிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வு வரும் ஜூன் மாதம் 25 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக […]